கர்நாடகத்தில் புதிதாக 891 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் புதிதாக 891 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் 19 ஆயிரத்து 738 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 891 பேருக்கு பாதிப்பு உறுதியானது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 832 பேர் பாதிக்கப்பட்டனர். மைசூருவில் 9 பேர், தார்வாரில் 8 பேர், தட்சிண கன்னடாவில் 7 பேர், சிவமொக்காவில் 6 பேர், பெலகாவி, துமகூருவில் தலா 5 பேர், உடுப்பி, பல்லாரியில் தலா 3 பேர், உத்தர கன்னடா, மண்டியா, கோலார், சிக்கமகளூருவில் தலா 2 பேர், பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர், ஹாசன், ராய்ச்சூர், விஜயாப்புராவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உத்தர கன்னடாவில் மட்டும் நேற்று ஒருவர் இறந்தார்.
பெங்களூரு நகர் உள்பட 29 மாவட்டங்களில் புதிதாக உயிரிழப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 80 ஆயிரத்து 585 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 83 பேர் இறந்து உள்ளனர். நேற்று 1,189 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 39 லட்சத்து 34 ஆயிரத்து 41 பேர் குணம் அடைந்து உள்ளனர். 6 ஆயிரத்து 149 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.