குஜராத்தில் 8-ம் வகுப்பு மாணவி குளிரால் உயிரிழப்பு?


குஜராத்தில் 8-ம் வகுப்பு மாணவி குளிரால் உயிரிழப்பு?
x

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் முழுமையான விவரங்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜ்காட்,

குஜராத்தின் ராஜ்காட் நகரில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள் ரியா (வயது14). அவர் நேற்று முன்தினம் பள்ளியில் இருந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. அவர் மாரடைப்பில் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் முழுமையான விவரங்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மாணவியின் பெற்றோர், எங்கள் குழந்தைக்கு வேறு உடல்நல பாதிப்பு இல்லை என்றும், குளிர் தாங்காமல் இறந்ததாகவும், பள்ளி நிர்வாகம் குளிரைத் தாங்கும் உடையை அணிந்து வர அனுமதிக்காததால் இந்த சம்பவம் நடந்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

வட மாநிலங்களில் குளிர் வாட்டுவதால், மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் தாமதமாக பள்ளிகளை திறக்கவும், குளிரை தாங்கும் இதமான, கனமான ஆடைகளை அணிந்து வர அனுமதி வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இருந்தாலும் அந்த நடைமுறையை பின்பற்றாததால் மாணவி ரியா இறந்ததாக கூறப்படுகிறது.


Next Story