குஜராத் வித்யாபீட பல்கலைக்கழக வேந்தராக கவர்னரா? - எதிர்ப்பு தெரிவித்து 9 அறங்காவலர்கள் விலகல்


குஜராத் வித்யாபீட பல்கலைக்கழக வேந்தராக கவர்னரா? - எதிர்ப்பு தெரிவித்து 9 அறங்காவலர்கள் விலகல்
x

கோப்புப்படம் 

குஜராத் வித்யாபீட பல்கலைக்கழக வேந்தராக கவர்னர் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 9 அறங்காவலர்கள் விலகி உள்ளனர்.

ஆமதாபாத்,

குஜராத்தில் ஆமதாபாத்தில் மகாத்மா காந்தி 1920-ம் ஆண்டு நிறுவிய கல்வி நிறுவனம், குஜராத் வித்யாபீட. இது நிகர்நிலைப்பல்கலைக்கழக அந்தஸ்து கொண்டது.102 கால வரலாற்று பெருமை கொண்ட இந்த கல்வி நிறுவனத்தின் வேந்தராக மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ் விராத் (வயது 63) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை அதன்ஆட்சி மன்ற கவுன்சில் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி, அதன் 24 அறங்காவலர்களில் 9 பேர் பதவி விலகி உள்ளனர்.

"இந்த நியமனம், மோசமான அரசியல் அழுத்தம் காரணமாகவே நடந்துள்ளது. காந்தியின் விழுமியங்கள், வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் ஆகியவற்றை முற்றிலும் புறக்கணித்து செய்துள்ளனர்" என அவர்கள் கூறி உள்ளனர். ஆனால் குஜராத் வித்யாபீ்டத்தின் ஆட்சி மன்ற கவுன்சில், இவர்களது பதவி விலகலை ஏற்பதில்லை என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.


Next Story