கர்நாடகத்தில் 929 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் 929 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 23,128 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் அதிகபட்சமாக 429 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மைசூருவில் 77 பேருக்கு கொரோனா உறுதியானது. நேற்று ஒரே நாளில் ஆஸ்பத்திரியில் இருந்து 987 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 4.01 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story