கர்நாடகத்தில் பள்ளிகளில் 10 நிமிட தியான வகுப்பு கட்டாயம்- மந்திரி பி.சி.நாகேஸ் உத்தரவு
கர்நாடகத்தில் பள்ளிகளில் 10 நிமிட தியான வகுப்பு கட்டாயம் என்று மந்திரி பி.சி.நாகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு: கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் அனைத்து பள்ளிகளுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தினமும் 10 நிமிடங்கள் கட்டாயம் தியானம் செய்ய வேண்டும். இது உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும். அவர்களின் உடல் நலன் மற்றும் கவனத்தை அதிகரிக்க உதவும். தியானம் என்பது மத விஷயம் கிடையாது. கொரோனா பரவலுக்கு பிறகு குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவது குறைந்துள்ளது. அவர்கள் அதிகளவில் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். இதை குறைக்க தியானத்தை அறிமுகம் செய்யுமாறு பல்வேறு தரப்பினர் கேட்டு கொண்டனர். அதனால் நாங்கள் தியான வகுப்பை அறிமுகம் செய்துள்ளோம். இதை சிலர் எதிர்க்கிறார்கள் என்பதால் முடிவை கைவிட முடியாது. இது ஒரு நல்ல முடிவு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story