பிரதமர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு
கடனை திருப்பி செலுத்திய நிலையில் ஆவணங்களை தரமறுத்த பிரபல தொழில் அதிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு:-
தொழில் அதிபர்
பெங்களூருவை சேர்ந்தவர் பிரசாந்த் சம்பரகி. இவர் பிரபல தொழில் அதிபர் ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் நடிகர் சுதீப் தொகுத்து வழங்கிய
'பிக்பாஸ்' ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் பிரசாந்த் சம்பரகி, மேலும் பிரபலம் அடைந்தார். இவர் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் பிரசாந்த் சம்பரகி, மீது அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த தேவநாத் என்பவர், கடந்த 2017-ம் ஆண்டு சொந்த செலவுகளுக்காக ரூ.7¼ லட்சத்தை பிரசாந்து சம்பரகியிடம் இருந்து கடன் பெற்றார். அதற்காக பிரசாந்த் சம்பரகியிடம் தனது வீட்டு பத்திரம், நிரப்பப்படாத காசோலைகள் உள்ளிட்டவற்றை அடமானமாக கொடுத்து இருந்தார்.
சொத்துக்களை அபகரித்து விடுவதாக மிரட்டல்
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பு கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேவநாத் தனது ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பிரசாந்த் சம்பரகி, மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் கடனை செலுத்தவில்லை என கூறி சொத்துக்களை அபகரித்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவநாத், இதுதொடர்பாக அல்சூர்கேட் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார், பிரசாந்த் சம்பரகி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் பற்றி அவதூறு...
தேவேகவுடா மற்றும் பிரதமர் மோடி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டது தொடர்பாக பெங்களூரு வடக்கு மண்டல போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரசாந்த் சம்பரகி, ரூ.2 லட்சத்திற்கான பிணையத்தொகை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.