ஜார்கண்டில் பயங்கரம் வாலிபர் தலை துண்டித்து கொலை தலையுடன் 'செல்பி' எடுத்த கொடூரம்
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் சாகர் முண்டா
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் சாகர் முண்டா(வயது 20).
இவரது குடும்பத்தினருக்கும், இவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், ஒன்றுவிட்ட சகோதரர் கானு முண்டாவை (24) சாகர் முண்டாவும், அவரது நண்பர்களும் கடந்த வாரம் கடத்திச் சென்றுவிட்டனர்.
அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில், கானு முண்டாவின் தந்தை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் தேடுதல் மேற்கொண்ட போலீசார், சாகர் முண்டா, அவரது மனைவி, நண்பர்கள் என மொத்தம் 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வாலிபர் கானு முண்டாவை தலையை துண்டித்து கொலை செய்தது தெரியவந்தது.அவர்கள் தெரிவித்த தகவல்படி, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து தலையற்ற உடலும், அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் தலையும் கண்டுபிடித்து மீட்கப்பட்டன.
கொலையாளி சாகர் முண்டாவின் நண்பர்கள், துண்டிக்கப்பட்ட தலையுடன் 'செல்பி' எடுத்த கொடூரமும் தெரியவந்திருக்கிறது.