டெல்லியில் துணிக்கடைக்காரர் சுட்டுக்கொலை


டெல்லியில் துணிக்கடைக்காரர் சுட்டுக்கொலை
x

கோப்புப்படம் 

டெல்லியில் துணிக்கடைக்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்படார்.

புதுடெல்லி,

டெல்லியின் பிந்தாபூர் பகுதியில் ஒரு துணிக்கடை நடத்திவந்தவர், மொகித் அரோரா. இவர் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு தனது சகோதரருடன் ஒரு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், அவர்களை இடைமறித்தனர். அந்த இருவரில் ஒருவர், துப்பாக்கியால் துணிக்கடைக்காரர் மொகித் அரோராவை சுட்டார். பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட துணிக்கடைக்காரர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். துப்பாக்கி ஆசாமிகள் தங்களிடம் பணம் எதுவும் கேட்டு மிரட்டவில்லை என துணிக்கடைக்காரரின் சகோதரர் தெரிவித்தார்.

இந்த கொலை தொடர்பாக தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரித்துவருவதாகவும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story