மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டை முதலை கடித்து கொன்றது
மைசூருவில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டை முதலை கடித்து கொன்றது.
மைசூரு:-
மைசூரு ராமானுஜர் ரோடு அக்ரஹாரா பகுதியில் ஏரி அருகே பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு நின்றிருந்தது. அந்த சமயத்தில் அங்கு வந்த முதலை ஒன்று பசுமாட்டை கடித்து கொன்று பாதி உடலை தின்று சென்றுவிட்டது. இதனை அந்தப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஆனால் அந்தப்பகுதியில் முதலை எதுவும் இல்லை. ஏற்கனவே அந்த ஏரியில் 3 முறை மக்கள் முதலையை பார்த்துள்ளனர். தற்போது பசுமாடு ஒன்றை முதலை கடித்து கொன்றுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ஏரியில் கிடக்கும் முதலையை பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்பேரில் வனத்துறையினர் ஏரியில் முதலைைய தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story