பத்ரா ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர் உடலை அடக்கம் செய்த போலீசார்


பத்ரா ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர் உடலை அடக்கம் செய்த போலீசார்
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பத்ரா ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர் உடலை போலீசார் அடக்கம் செய்தனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் கலசா அருகே உள்ள ஹேரம்பி கிராமத்தில் பத்ரா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கடந்த 20-ந்ேததி 25 வயது வாலிபர் ஒருவரின் உடல் மிதந்து வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த பகுதி மக்கள் கலசா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று ஆற்றில் இருந்து வாலிபரின் உடலை கைப்பற்றினர்.

விசாரணையில் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரு வாரம் கடந்த பின்பும் அவரது உடலை கேட்டு குடும்பத்தினரோ, உறவினர்களோ யாரும் வரவில்லை என தெரிகிறது.

இதனால் அவரது உடலை ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிணவறையில் வைத்திருந்தனர். இந்த நிலையில் பிணவறையில் உள்ள குளிர்பதன பெட்டி பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஆஸ்பத்திரி ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் அவர்கள் உடனே இதுபற்றி கோர்ட்டில் தெரிவித்தனர்.

அதையடுத்து அந்த வாலிபரின் உடலை அடக்கம் செய்ய நீதிபதி, போலீசாருக்கு அனுமதி வழங்கினார். அதன்பேரில் நேற்று சிக்கமகளூரு டவுன் போலீசார், நகரசபை ஊழியர்களுடன் ேசர்ந்து அந்த வாலிபரின் உடலை ராமனஹள்ளியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.


Next Story