திருப்பதி அருகே ஓட்டல் பெண் ஊழியர் கொடூர கொலை...! போலீஸ் விசாரணை
திருப்பதி அருகே வீட்டில் இருந்த இளம் பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி ரெட்டியம்மா (வயது 26). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து உள்ளனர். இதனால் ரெட்டியம்மா திருப்பதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கொண்டு திருமலையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
ரெட்டியம்மாவின் மகன் அவரது தங்கை லட்சுமியம்மாவிடம் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் திருப்பதியில் வீட்டு வாடகை அதிகமாக இருப்பதால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அங்குள்ள வீட்டை காலி செய்துவிட்டு திருப்பதி அருகே உள்ள பாக்ரா பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினார்.
இந்த நிலையில் நேற்று ரெட்டியம்மா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று மாலை ரெட்டியம்மாவின் வீட்டு கதவு திறந்து இருந்தது. அங்குள்ள நாய்கள் வீட்டிற்குள் அடிக்கடி சென்று வந்தன. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து ரெட்டியம்மா வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்குள்ள அறையில் ரெட்டியம்மா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக பிறந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாக்ரா பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மோப்பநாய் கொண்டுவரப்பட்டு மோப்பம் பிடித்தவாறு சிறு தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து ரெட்டியம்மா பிணைத்த மீட்டு பிரேத பரிசோதனைக்காக பங்க்ரா பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த ரெட்டியம்மா கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த இளம் பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.