'பர்னிச்சர்' கடையில் தீவிபத்து; பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்
தாண்டேலி அருகே மின்கசிவினால் ‘பர்னிச்சர்’ கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
கார்வார்;
பர்னிச்சர் கடை
உத்தர கன்னடா மாவட்டம் தாண்ேடலி தாலுகா அம்பேவாடி பகுதியை சேர்ந்தவர் உதய நாயக். இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக பா்னிச்சர் கடை இருந்தது. இவர் நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை இவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கடையின் ஜன்னல் வழியாக பாா்த்துள்ளனர். அப்போது கடையில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எாிந்து கொண்டிருந்தது. உடனே அவர்கள் கடையின் உரிமையாளருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து கடையின் உரிமையாளர் உதய நாயக் விரைந்து வந்து கடையின் ஷெட்டரை திறந்து பார்த்துள்ளார்.
தண்ணீரை பீய்ச்சி அடித்து...
அதில் மரச்சாமான்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தது. ேமலும் அதே சமயம் மேற்கு கடற்கரை காகித ெதாழிற்சாலை தீயணைப்பு படையினரும், ஹலியால் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இ்ந்த நிலையில் கடையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவி உள்ளது. இதையடுத்து தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீயானது மளமளவென எரிய தொடங்கியது. இந்த நிலையில் பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலும் அணைத்தனர். மேலும் அருகில் உள்ள கடைகளுக்கும் பரவிய தீயை அணைத்தனர். இதில் அருகில் உள்ள கடைகளில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து தாண்டேலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாா்வையிட்டனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பு
மேலும் தீயை முற்றிலும் அணைத்த பின்னர் கடைக்குள் சென்று தீவிபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். இதில் கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகதான் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் கடையில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரச்சாமான்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்தது.
மேலும் இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.