ஜவுளி கடை ஊழியரை கத்திரிக்கோலால் குத்திய நண்பர்


ஜவுளி கடை ஊழியரை கத்திரிக்கோலால் குத்திய நண்பர்
x

வீடியோ காலில் பேசிய மனைவியை காண்பிக்குமாறு கூறியதால் ஜவுளி கடை ஊழியரை கத்திரிக்கோலால் குத்திய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:-

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு திருமணமாக மனைவி உள்ளார். மேலும் ராஜேஷ், அந்த பகுதியில் உள்ள ஜவுளி கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அதே கடையில் சுரேஷ் என்பவரும் வேலை செய்து வருகிறார். இருவரும் நண்பர்கள் ஆவார்கள். ராஜேஷ், கடையில் வேலை செய்யும்போது இடைவேளை நேரத்தில் தனது மனைவியுடன் செல்போனில் வீடியோ கால் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று ராஜேஷ், கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இடைவேளை நேரத்தில் வழக்கம்போல் அவர் தனது மனைவியுடன் வீடியோ காலில் பேசினார். அப்போது மனைவியை வீடியோ காலில் காட்டுமாறு சுரேஷ் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், சுரேசிடம் வாக்குவாதம் செய்தார். இருவருக்கும் இடையே தகராறு எல்லை மீறியது.

இந்த நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் சுரேஷ், கடையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து ராஜேசின் வயிற்றில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜேஷ் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்கள், அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story