பெண்ணிடம் ரூ.2 லட்சம் தங்கச்சங்கிலி பறிப்பு
முகவரி கேட்பதுபோன்று நடித்து பெண்ணிடம் ரூ.2 லட்சம் தங்கச்சங்கலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோலார் தங்கவயல்:
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா மஞ்சேனஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிக்கஹனுமேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாத். இவரது மனைவி இந்திரம்மா. கணவனை இழந்த இவர், ஆடு-மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது வயலில் ஆடு-மாடுகளை அவர் மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், இந்திரம்மாவிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து இந்திரம்மா கவுரிபிதனூர் புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story