மருத்துவக்கல்லூரி பேராசிரியையிடம் பாலியல் சில்மிஷம்
ஓடும் பஸ்சில் மருத்துவக்கல்லூரி பேராசிரியையிடம் பாலியல் சில்மிஷம் செய்த கிளீனரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே தேரளகட்டே பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியையாக ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர், பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்தார். அப்போது பேராசிரியையிடம், அந்த பஸ்சின் கிளீனர் முகமது இம்ரான் (வயது 26) என்பவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுசம்பந்தமாக பேராசிரியை உல்லால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இம்ரானை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story