ரூ.8 கோடி செலவில் புதிய கட்டிடம்


ரூ.8 கோடி செலவில் புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 30 Nov 2022 2:06 AM IST (Updated: 30 Nov 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

ராபர்ட்சன்பேட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதை வருகிற 14-ந் தேதி மந்திரி சுதாகர் திறந்து வைக்க உள்ளார்.

கோலார் தங்கவயல்:

ஆய்வு

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.8 கோடி செலவில் நவீன வசதிகள் கொண்ட புதிய ஆஸ்பத்திரியை கட்ட நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்படி புதிய ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய மருத்துவமனை கட்டிடம் வருகிற 14-ந் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், நேற்று ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட சகாதாரத்துறை அதிகாரிகள், கோலார் தங்கவயல் ஆஸ்பத்திரியின் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

வருகிற 14-ந் தேதி...

பின்னர் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- கோலார் தங்கவயலில் உள்ள புதிய ஆஸ்பத்திரி கட்டிடத்தை வருகிற 14-ந் தேதி சுகாதார துறை மந்திரி திறந்து வைக்கிறார். இதன்மூலம் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story