ஓடும் பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை
மங்களூருவில் ஓடும் பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு:-
பெங்களூருவில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் நெல்லியாடி அருகே வந்தபோது, மாணவி ஒருவர் பஸ்சில் ஏறினார். மாணவி பயணித்த இந்த பஸ்சில் பெர்னே பகுதியை சேர்ந்த அஷ்ரப் (வயது 45) என்ற தொழிலாளியும் பயணித்தார். இவரின் அருகே மாணவி வந்து அமர்ந்தபோது, அஷ்ரப் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை மாணவி கண்டித்தார். ஆனால் அஷ்ரப் கேட்கவில்லை. தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் கோபமடைந்த மாணவி, உடனே எழுந்து அஷ்ரப்பை திட்டினார். இதை பார்த்த டிரைவர், கண்டக்டர்கள் பஸ்சை நிறுத்தினர். பின்னர் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி, அஷ்ரப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இந்த கேட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை நேராக உப்பினங்கடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு உப்பினங்கடி போலீசாரிடம் அஷ்ரப்பை ஒப்படைத்தனர். அவரை கைது செய்த உப்பினங்கடி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.