போலீசார் லத்தியால் தாக்கியதில் வாலிபர் சாவு


போலீசார் லத்தியால் தாக்கியதில் வாலிபர் சாவு
x

பெங்களூரு அருகே போலீசார் லத்தியால் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்தார்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் மாதநாயக்கனஹள்ளி தாலுகா சொன்டேகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் பலராம் (வயது 35). இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி சொன்டேகொப்பா கிராமத்தில் உள்ள மதுபான விடுதியில் குடிபோதையில் சிலர் தகராறு கொண்டு இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ஜனார்த்தன் ஆகியோர் மதுபான விடுதிக்கு சென்று தகராறு செய்தவர்களை லத்தியால் விரட்டி அடித்தனர். இதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த பலராமுக்கும் லத்தியால் அடி விழுந்தது.

அதாவது பலராமின் மர்ம உறுப்பில் லத்தி அடி விழுந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி பலராமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மாதநாயக்கனஹள்ளியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பலராம் இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story