சிக்காம்வியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்


சிக்காம்வியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்
x
தினத்தந்தி 18 Dec 2022 2:03 AM IST (Updated: 18 Dec 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

சிக்காம்வி தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுவதால் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்,

பெங்களூரு:-

கிராம தங்கல் திட்டம்

கர்நாடக அரசு கிராம தங்கல் திட்டம் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது, இதன்படி ஹாவேரி மாவட்டம் சிக்காம்வி தாலுக்காவில் கிராம தங்கல் திட்டத்தின் படி வருவாய்த்துறை மந்திரி அசோக் சிக்காம்வியில் உள்ள கிராமத்தில் தங்கி இருந்தார்.

முன்னதாக இந்த கிராம தங்கல் திட்டத்தை முதல் -மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கூறும்போது;-சிக்காம்வி தொகுதியில் முதல் முறையாக போட்டியிடும்போது எனது உயிர் இந்த தொகுதி மண்ணில் தான் போக வேண்டும் என்று உங்களிடம் கூறியிருந்தேன், இந்தத் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்பது பற்றி எனது கவனத்திற்கும் வந்தது.

நிவாரண உதவிகள்

இன்னும் பத்து நாட்களில் மழையால் வீடு இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். இதற்காக வருகிற 31-ந் தேதி மீண்டும் இந்த தொகுதிக்கு வந்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவேன். அதேபோல இந்த தொகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். இந்த தொகுதியில் வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் விதமாக ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டால் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த ஜவுளி பூங்காவில் பணியாற்றும் பெண்களுக்கு தேவையான பயிற்சிகள் தற்போது அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story