நாடு முழுவதும் 200 ரெயில் சேவைகள் பாதிப்பு என தகவல்
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் நாடு முழுவதும் 200 ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேசம், பீகார் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ரெயில்களுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் நாடு முழுவதும் 200 ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக 35 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, 12 ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்னிபத்துக்கு எதிராக பீகாரில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பீகார் துணை முதல்-மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான ரேணு தேவியின் வீட்டில் கார்களை சேதப்படுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story