கணவனுக்கான துணை மட்டுமே அல்ல கனவுகள், விருப்பங்களை தொடர மனைவிக்கு உரிமை உண்டுடெல்லி ஐகோர்ட்டு கருத்து


கணவனுக்கான துணை மட்டுமே அல்ல கனவுகள், விருப்பங்களை தொடர மனைவிக்கு உரிமை உண்டுடெல்லி ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 11 July 2023 12:45 AM IST (Updated: 11 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

சட்டப்படி அவள் தன் கனவுகள், விருப்பங்கள், ஆசைகளை தொடரலாம்.

புதுடெல்லி,

டெல்லி சதர் பஜாரில் உள்ள தனது கடையை வாடகைக்கு எடுத்திருப்போரை காலி செய்ய உத்தரவிடக்கோரி உரிமையாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அவரது மனைவி ஓட்டல் வர்த்தகத்தில் சம்பாதிப்பதாகவும், அது குறித்து வழக்கில் தெரிவிக்கவில்லை என்பதும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி அவரது மனுவை கீழ் கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி நஜ்மி வாஜிரி, வாடகைதாரர் கடையை காலி செய்ய உத்தரவிட்டார். உரிமையாளரின் மனைவி தனது தொழில் மற்றும் வருவாயை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ஒரு மனைவி என்பவர் கணவனுக்கு வெறும் துணையோ, இணைப்போ கிடையாது. அவளுடைய அடையாளம் கணவரின் அடையாளத்துடன் இணைவதோ அல்லது தொகுப்பதோ இல்லை. சட்டப்படி அவள் தன் கனவுகள், விருப்பங்கள், ஆசைகளை தொடரலாம். நிதி ரீதியாக தற்சார்பாக இருக்க வேண்டும் அல்லது சில அர்த்தமுள்ள சமூகப் பணிகளைச் செய்ய வேண்டும் என்ற இயல்பான உரிமையைத் தக்க வைத்துக்கொள்கிறாள்' என்று தெரிவித்தார். மனைவி தன் கணவனுக்கு அடிபணிந்தவளாக இருப்பாள் என்றும், அவளுடைய எல்லா நிதி விவரங்களையும் கணவனிடம் தெரிவிக்கவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ கடமைப்பட்டிருக்கிறாள் என்றும் அனுமானிக்க முடியாது என்றும் நீதிபதி கூறினார்.


Next Story