பெங்களூருவில் பைக்கில் லிப்ட் கேட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
பெங்களூருவில் பைக்கில் லிப்ட் கேட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று இரவு கோரமங்கலா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்.
அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பைக்கில் லிப்ட் கேட்டுள்ளார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு லிப்ட் கொடுத்த நபர், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்ததோடு, சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு அருகில் இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருவதாக பெங்களூரு கிழக்கு மண்டல ஏ.சி.பி. ராமன் குப்தா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story