பெங்களூருவில் வாடகை கார் ஓட்டும் இளம்பெண்


பெங்களூருவில் வாடகை கார் ஓட்டும் இளம்பெண்
x

பெங்களூருவில் வாடகை கார் ஓட்டும் இளம் பெண் தொழில் அதிபர் ஆக வேண்டும் என்பதே லட்சியம் என்று கூறி அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவை சேர்ந்த ராகுல் என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாடகை காரில் ஒரு இளம்பெண் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில், எனது நண்பருடன் வெளியே செல்ல ஊபரில் வாடகை காரை பதிவு செய்தேன். அந்த காரை ஒரு இளம்பெண் ஓட்டி வந்தார். அந்த காரின் டிரைவர் இருக்கைக்கு அருகில் ஒரு குழந்தை தூங்கி கொண்டு இருந்தது. இதுகுறித்து அந்த இளம்பெண்ணிடம் கேட்ட போது அந்த குழந்தை தனது குழந்தை தான் என்று கூறினார்.

அந்த இளம்பெண்ணிடம் வாடகை கார் ஓட்டுவது குறித்து கேட்டேன். அப்போது அவர் தனது பெயர் நந்தினி என்று கூறினார். தொழில் அதிபர் ஆக வேண்டும் என்ற ஆசையில் நடமாடும் உணவகத்தை நந்தினி தொடங்கினார். ஆனால் கொரோனா காரணமாக அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட இழப்பீட்டை சரிசெய்ய நந்தினி வாடகை கார் ஓட்டி வருகிறார். தொழில் அதிபர் ஆக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறுகிறார். அந்த இளம்பெண்ணுக்கு வாழ்த்துகள் என்று கூறி இருந்தார். இந்த பதிவை பார்த்தவர்கள் நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story