அப்துல்கலாம் கனவு பள்ளி திட்ட மலர் வெளியீடு
பெங்களூருவில் அப்துல்கலாம் கனவு பள்ளி என்ற திட்டம் குறித்த மலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடக்கிறது.
பெங்களூரு:-
பெங்களூரு மாநகராட்சியின் கல்வித்துறை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெயரில் 'ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கனவு பள்ளி' என்ற புதிய திட்டம் குறித்த மலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் கலந்து கொண்டு அந்த மலரை வெளியிட்டு பேசியதாவது:-
பெங்களூரு மாநகராட்சியின் கல்வித்துறையின் கீழ் 93 அரசு பள்ளிகள், 16 தொடக்க பள்ளிகள், 18 பி.யூ. கல்லூரிகள், 4 பட்டப்படிப்பு கல்லூரிகள், முதுநிலை பட்டப்படிப்பு கல்லூரிகள் என மொத்தம் 165 பள்ளி-கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெயரிலான, 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கனவு பள்ளி' திட்டத்தில் 5 தொடக்க பள்ளிகள், 5 உயர்நிலை பள்ளிகள், 5 பி.யூ.கல்லூரிகள், 2 பட்டப்படிப்பு கல்லூரிகள் என மொத்தம் 17 பள்ளி-கல்லூரிகளின் தலைமை ஆசிரியர், முதல்வர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. அந்த நிதி அந்தந்த கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு செலவிடப்படுகிறது.
இவ்வாறு ராம்பிரசாத் மனோகர் பேசினார்.