'நமது வரலாறை புரிந்துகொள்ள இந்தியை கற்கவேண்டும்' - அமித்ஷா
நமது கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்று வரும் இந்தி தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-
நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும்.
உள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாசார ஓட்டத்தில் முதன்மையானவை. ஒவ்வொரு மொழியையும் நாம் பலப்படுத்துவதன் மூலம் அலுவல் மொழியான இந்தியையும் நாம் பலப்படுத்த முடியும். நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதியேற்க வேண்டும். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை, அலுவல் மொழியும், உள்ளூர் மொழிகளும் ஒன்று சேர்ந்து அகற்றும். அதற்கான நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story