மராட்டியத்தில் 100 அடி பள்ளத்தில் ஜூப் பாய்ந்து விபத்து: 3 பேர் பலி
அமராவதியில் 100 அடி பள்ளத்தில் ஜூப் பாய்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.
அமராவதி,
மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டம் சிக்கல்தாரா பகுதியில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 7 பேரை ஏற்றி கொண்டு ஜூப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை 5 மணி அளவில் ஜூப் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலை ஒரமாக கிடந்த 100 பள்ளத்தை நோக்கி பாய்ந்தது. இதனால் ஜூப்பில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டனர்.
பள்ளத்தில் விழுந்த விபத்தில் ஜூப்பில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார், கிரேன் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். பள்ளத்தில் தவறி விழு்ந்து கிடந்த 4 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story