மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; தந்தை, மகள் சாவு


மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; தந்தை, மகள் சாவு
x

ராமநகரில் மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநகர்:

ராமநகரில் மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தந்தை-மகள் சாவு

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சபர்பாளய்யா பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் (வயது 47). இவரது மகள் ஹர்ஷிதா (14). இவள் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். ஹர்ஷிதாவை தினமும் யோகேஷ் தான் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் அவர், தனது மகளை பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

அவர்கள் 2 பேரும் பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் யோகேசும், ஹர்ஷிதாவும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சோகம்

இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மாகடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

:போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளிக்கு சென்றபோது தந்தை-மகள் விபத்தில் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து மாகடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story