சுப்பிரமணியா அருகே விபத்து; ஜீப்-கார் மோதல்; 6 பேர் படுகாயம்


சுப்பிரமணியா அருகே விபத்து; ஜீப்-கார் மோதல்; 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:30 AM IST (Updated: 1 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

சுப்பிரமணியா அருகே ஜீப்-கார் மோதி கொண்ட விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் சுப்பிரமணியா-தர்மஸ்தலா நெடுஞ்சாலையில் பிலிநெலே அருகே நேற்று முன்தினம் ஒரு காரும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கார் மற்றும் ஜீப் ஆகிய 2 வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தன.

இந்த கோர விபத்தில் 2 வாகனங்களிலும் பயணித்து வந்த கடபா அருகே குற்றப்பாடி பகுதியைச் சேர்ந்த ஜோசப் சூரியன்(வயது 59), சனல்(39), லினி ஜோசப்(54) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தற்போது அவர்கள் சுப்பிரமணியாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து கடபா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story