நடிகர் ஜக்கேஷ் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது
நடிகர் ஜக்கேஷ் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது.
பெங்களூரு: கர்நாடக பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் நடிகர் ஜக்கேஷ். இவரது செந்த ஊர் துமகூரு மாவட்டம் மாயச்சந்திரா கிராமம் ஆகும். அவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த நிலையில் துமகூருவில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் நிரம்பி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு மாயச்சந்திரா கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. அதுபோல் ஜக்கேசின் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதில் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் சேதமானது. இதுதொடர்பான புகைப்படத்தை ஜக்கேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பகுதியில் சிலர் மழைநீர் வடிகால் பகுதியில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியதே வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.