பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நடிகர் சுதீப் பிரசாரம்


பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நடிகர் சுதீப் பிரசாரம்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நடிகர் சுதீப் பிரசாரம் செய்தார்.

உப்பள்ளி-

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் நடிகர், நடிகைகளும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். இதில் பிரபல நடிகர் சுதீப், பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக தெரிவித்துள்ளார். அதன்படி அவர் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அவர், தார்வார் மாவட்டத்துக்கு ெசன்றார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மகேஷ் தெங்கினகாயை ஆதரித்து திறந்த வாகனத்தில் நடிகர் சுதீப் பிரசாரம் செய்தார். உப்பள்ளி தேவாங்கு பேட்டை கல்மேஷ் கோவிலில் இருந்து பெங்கேரி கோபன்கொப்பா வரை நடிகர் சுதீப் 'ரோடு ஷோ' நடத்தினார். அப்போது அவர் மக்களிடம், மகேஷ் தெங்கினகாய்க்கு வாய்ப்பு வழங்கும்படி வாக்கு சேகரித்தார். இந்த 'ரோடு ஷோ' வில் வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு சுதீப்பை வரவேற்றனர்.

இந்த தொகுதியில் தான் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்க பா.ஜனதா வியூகங்களை வகுத்து வருகிறது.


Next Story