நடிகர்கள் விருந்து நிகழ்ச்சி: ஓட்டல் மேலாளர் மீது வழக்கு


நடிகர்கள் விருந்து நிகழ்ச்சி:  ஓட்டல் மேலாளர் மீது வழக்கு
x

நடிகர்கள் விருந்து நிகழ்ச்சி விவகாரத்தில் ஓட்டல் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெங்களூரு: பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னிந்திய சினிமா நட்சத்திர விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களை சேர்ந்த நடிகர், நடிகைகள், பிற சினிமா கலைஞர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்த முடிந்த பின்பு, பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர்கள், சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். பெங்களூருவில் நள்ளிரவு 1 மணிவரையே ஓட்டல்களில் விருந்து நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நடிகர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சி அதிகாலை 3.30 மணிவரை நடைபெற்றிருந்தது. விதிமுறைகளை மீறி அதிகாலை வரை விருந்து நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதற்காக நட்சத்திர ஓட்டல் மேலாளர் மீது கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர்.


Next Story