நடிகை ரம்யாவின் காதல் ரகசியம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்
கன்னட நடிகை ரம்யா தனது காதல் ரகசியத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு:
கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரம்யா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் எம்.பி.யும் ஆவார். இந்த நிலையில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வளர்ப்பு நாயின் வீடியோவை வெளியிட்டு ஒரு பதிவு செய்து உள்ளார். அதில் 'ராணி எங்களுடன் ஒரு வருடமாக இருக்கிறாள். கார் மோதி சாலையில் விழுந்து கிடந்த ராணி, கோவாவில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தாள். எங்களிடம் 2 நாய்கள் வளர்ந்தன.
வாழ்க்கையில் எதையும் நான் தீர்மானிக்க வேண்டியது இல்லை. வாழ்க்கையே அனைத்தையும் தீர்மானிக்கிறது. தேங்க் யூ மை ராணி, மை பேபி கேர்ள், எனது இதயத்தை திறந்ததற்கு நன்றி, ஐ லவ் யூ, ஐ லவ் யூ' என்று கூறியுள்ளார். இந்த வீடியோவுக்கு பலரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story