சனாதனத்தை தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் - அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்


சனாதனத்தை தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் - அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 6 Sept 2023 4:02 PM IST (Updated: 6 Sept 2023 4:11 PM IST)
t-max-icont-min-icon

எந்த மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதினர்.

மேலும் சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக மந்திரி பிரியங் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சனாதனத்தை தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எந்த மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியா-பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்டவர்களே பதில் அளிக்க வேண்டும் எனவும் மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.




Next Story