ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் குடியிருப்புவாசிகள் அச்சம்
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்தநிலையில், மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, அவை அகற்றப்பட்டு வருகிறது. மகாதேவபுரா உள்பட பல பகுதிகளில் ராஜகால்வாய்கள் மீது கட்டப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள குடியிருப்பு வாசிகள் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பெங்களூரு வாசிகள் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இல்லாமல், கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்காது. எனவே மாநகராட்சி அதிகாரிகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறினர்.
Related Tags :
Next Story