அக்னிபத் திட்டம் - நாடு முழுவதும் ஜூன் 27-ந் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஜூன் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்ப்பதற்கு 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டெல்லியில் இன்று மாலை அனைத்து மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களை ராகுல் காந்தி சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story