அதிமுக பொதுச்செயலாளரான பின் திருப்பதியில் தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி...!
இன்று காலை 10 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
திருப்பதி,
தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருப்பதி மலைக்கு காரில் வந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து புஷ்கரணி அருகே உள்ள வராக சாமி கோவில் மற்றும் மாட வீதியில் உள்ள ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு தேவஸ்தான விடுதியில் தங்கினார். இன்று காலை 10 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். இதையடுத்து கார் மூலம் வேலூர் வழியாக சேலத்திற்கு சென்றார். வழி நெடுகிலும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
Related Tags :
Next Story