உத்தரபிரதேசத்தின் 50 தொகுதிகளில் 'இந்தியா' கூட்டணி வெற்றிபெறும் - ராகுல்காந்தி
ஜூன்4-ந்தேதி இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இருக்க மாட்டார் என ராகுல்காந்தி கூறினார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அலோக் மிஸ்ரா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;
"வருகிற ஜூன்4-ந்தேதி இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இருக்க மாட்டார். இதை நீங்கள் என்னிடமிருந்து எழுத்துப்பூர்வமாக எடுத்துக் கொள்ளுங்கள். உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 50 தொகுதிக்கு குறையாமல் 'இந்தியா' கூட்டணி வெற்றிபெறப் போகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். பிற மாநிலங்களிலும் பா.ஜனதா பின்தங்கியுள்ளது."
இவ்வாறு அவர் பேசினார். கான்பூரில் நான்காவது கட்ட மக்களவைத் தேர்தல் வருகிற 13-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story