'பிரதமரே நாட்டில் இல்லாதபோது அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு' - ராகுல் காந்தி விமர்சனம்


பிரதமரே நாட்டில் இல்லாதபோது அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு - ராகுல் காந்தி விமர்சனம்
x

பிரதமரே நாட்டில் இல்லாதபோது அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. குக்கி இன மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் போல மைத்தேயி இன மக்களையும் பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்த சம்பவங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து மணிப்பூரில் நடைபெறும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பின்பும் அங்கும் வன்முறை ஓயவில்லை.

இந்நிலையில் மணிப்பூர் நிலவரம் தொடர்பாக வரும் ஜூன் 24ஆம் தேதியன்று அனைத்துக்கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு மாநில கட்சிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இந்தக்கூட்டத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து கட்சித்தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த பேச்சுவார்த்தை மூலம் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில், மணிப்பூரின் நிலைமை குறித்து விவாதிக்க, மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி வெளியிடுள்ள டுவிட்டர் பதிவில் "மணிப்பூர் மாநிலம் கடந்த 50 நாட்களாக பற்றி எரிகிறது, ஆனால் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார் பிரதமரே நாட்டில் இல்லாதபோது அனைத்துக் கட்சி கூட்டம். இந்தக் கூட்டம் பிரதமருக்கு முக்கியமில்லை என்பது தெளிவாகிறது" என தெரிவித்துள்ளார்.


Next Story