பெண்கள் அனைவரும் ஒரே சாதி; எந்த சவாலையும் எதிர்கொள்வார்கள் - பிரதமர் மோடி பேச்சு
சமீப காலமாக சிலர் பிரிவினைகளை உருவாக்கி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக நாடு முழுவதும் 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' என்ற இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை பெற முடியாதவர்களும் இதன் மூலம் பயனடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், "பெண்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சமீப காலமாக சிலர் பிரிவினைகளை உருவாக்கி வருகின்றனர். பெண்கள் அனைவரும் ஒரே சாதி. அவர்கள் ஒன்றாக இணைந்து எந்த சவாலையும் எதிர்கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story