ஆம்புலன்சில் போதைப்பொருள் கடத்தல்: பஞ்சாப்பில் 3 பேர் கைது
பஞ்சாப் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றில் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலம் தாப்பர் கிராமத்தின் அருகே அம்பாலா-சண்டிகார் நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அம்பாலாவில் இருந்து வந்த ஒரு ஆம்புலன்சை அவர்கள் நிறுத்தினர்.அதன் உள்ளே பார்த்தபோது, ஒருவர் நோயாளி போல படுத்திருக்க, அவர் அருகே மற்றொருவர் அமர்ந்திருந்தார். ஆனால் முதலுதவி சாதனங்கள் உள்பட எந்த மருத்துவ உபகரணங்களும் இல்லை. அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆம்புலன்சில் சோதனையிட்டபோது, தலையணைக்குள் 8 கிலோ அபின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதையடுத்து, ஆம்புலன்சில் வந்த உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் சண்டிகாரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story