ஆம்புலன்ஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு


ஆம்புலன்ஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
x
தினத்தந்தி 14 March 2023 10:00 AM IST (Updated: 14 March 2023 10:02 AM IST)
t-max-icont-min-icon

காபுவில் ஆம்புலன்ஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மங்களூரு-

உடுப்பி மாவட்டம் காபு தாலுகா உச்சிலா பகுதியை சேர்ந்தவர் ரித்தேஷ் (வயது 35). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் உடுப்பி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் காபு பகுதியில் வந்தபோது, எதிரே உடுப்பியில் இருந்து மங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்புலன்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரித்தேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ் டிரைவரின் அலட்சியத்தால் விபத்து நடந்தது தெரியவந்தது. ஆம்புலன்சில் நோயாளி யாரும் இல்லாதபோதும் டிரைவர் வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து காபு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்தனர். மேலும் ஆம்புலன்சும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story