அசாமில் அமித்ஷா, ஜே.பி. நட்டா நாளை ஒன்றாக சுற்றுப்பயணம்


அசாமில் அமித்ஷா, ஜே.பி. நட்டா நாளை ஒன்றாக சுற்றுப்பயணம்
x

அசாமில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா வடகிழக்கு பகுதியில் பெரிய கட்சி அலுவலம் ஒன்றை திறந்து வைக்க உள்ளனர்.



கவுகாத்தி,



அசாம் மாநிலத்திற்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இதுபற்றி அசாம் பா.ஜ.க. தலைவர் பாபேஷ் கலிடா கூறும்போது, கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அசாமிற்கு வருகை தருகின்றனர்.

கவுகாத்தி நகரின் பசிஸ்தா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அசாம் மாநில பா.ஜ.க. அலுவலகம் ஒன்றை அவர்கள் திறந்து வைக்கின்றனர் என கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய மந்திரி சர்பானந்தா சோனாவால் மற்றும் கட்சியின் மாநில தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதன்பின் கவுகாத்தி நகரில் கானாபாரா பகுதியில் உள்ள கால்நடை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கட்சி தொண்டர்களின் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா ஆகிய இருவரும் கலந்து கொள்கின்றனர்.


Next Story