டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்கிறது - பிரதமர் மோடி


டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்கிறது - பிரதமர் மோடி
x

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5 ஜி துறையில் மிகப்பெரிய நாடுகளுடன் இந்தியா போட்டி போடுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஆந்திராவில் புட்டபர்த்தியில் சாய் ஹிரா கன்வென்ஷன் மையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியா தனது கர்தவ்யாவுக்கு முதலிடம் கொடுக்கிறது. சுதந்திரத்தின் அடுத்த 25 ஆண்டுகள் நமது கர்தவ்ய காலமாக இருக்கும். இந்த மாநாட்டு மையத்தின் படங்களை நான் பார்த்திருக்கிறேன். இங்கே ஆன்மீக மாநாடுகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகளின் மையமாக இருக்கும். உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்கள் இங்கு வருவார்கள். மேலும் இந்த மையம் நாட்டின் இளைஞர்களுக்கு உதவும் என நம்புகிறேன்.

துறவிகள் பெரும்பாலும் நம் நாட்டில் ஓடும் நீர் என்று வர்ணிக்கப்படுகிறார்கள், ஏனென்றால் துறவிகள் ஒருபோதும் தங்கள் எண்ணங்களோடு நின்றுவிட மாட்டார்கள், அவர்கள் தங்கள் செயல்களை நிறுத்த மாட்டார்கள். தொடர் ஓட்டமும், தொடர் முயற்சியும் தான் மகான்களின் வாழ்க்கை.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5 ஜி துறையில் மிகப்பெரிய நாடுகளுடன் இந்தியா போட்டி போடுகிறது.உலகளாவிய ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 40% பரிவர்த்தனை இந்தியாவில் நடக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5 ஜி துறையில் மிகப்பெரிய நாடுகளுடன் இந்தியா போட்டி போடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story