அந்தமான் - நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு


அந்தமான் - நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
x

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

போர்ட் பிளேர்,

அந்தமான் நிகோபர் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 431 கி.மீ. தென்கிழக்கே இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 75 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.


Next Story