பெண் குளிப்பதை எட்டி பார்த்த தனியார் நிறுவன ஊழியர் கைது


பெண் குளிப்பதை எட்டி பார்த்த தனியார் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பக்கத்து வீட்டில் பெண் குளிப்பதை எட்டி பார்த்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:-

பெண் குளிப்பதை பார்த்தார்

பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முன்னேகோலாலு அருகே மஞ்சுநாத் நகரில் ஒரு பெண் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் வீட்டையொட்டியே நிதின்(வயது 23) என்பவர் வசித்து வருகிறார். நிதின் வசிக்கும் வீட்டின் சுவர் அருகே பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் குளியலறை இருக்கிறது.

இந்த நிலையில், அந்த பெண் தன்னுடைய வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருப்பதை தன்னுடைய வீட்டு ஜன்னல் வழியாக நிதின் எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சத்தம் போட்டு அந்த பெண் கூச்சலிட்டார். இதனால் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் பெண்ணின் வீட்டுக்கு ஓடிவந்தனர்.

தனியார் நிறுவன ஊழியர் கைது

அப்போது, தான் குளிப்பதை பக்கத்து வீட்டில் வசிக்கும் நிதின் எட்டிபார்ப்பதாக அந்த பெண் கூறினார். உடனே நிதினை பிடித்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மாரத்தஹள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில், நிதின் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது.

மேலும் பக்கத்து வீட்டின் பெண் குளிப்பதை தினமும் தனது வீட்டு ஜன்னல் வழியாக நிதின் எட்டிப்பார்த்து வந்ததும், அதுபோல், நேற்று முன்தினமும் பார்த்து கொண்டிருந்த போது, அந்த பெண் நிதினை கண்டுபிடித்ததும் தெரியவந்துள்ளது. கைதான நிதின் மீது மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story