சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி சாவு


சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி சாவு
x

பூஜை செய்யும் போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலியாகினார்.

மங்களூரு;


உடுப்பி அருகே அம்பால்பாடியை சேர்ந்தவர் ருக்மணி (வயது 80). இவர் கடந்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி தனது வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது பூஜை அறையில் இருந்த விளக்கில் அவரது சேலை பட்டதாக தெரிகிறது.

இதனை ருக்மணி கவனிக்கவில்லை. இதனால், அவரது சேலையில் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் அந்த தீ, மளமளவென உடல் முழுவதும் பரவி எரிந்தது. இதனால் அவர், வலியால் கதறி துடித்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனாலும் அதற்குள் ருக்மணி, உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவர் மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story