ஆந்திரா: சித்தூர் மாவட்டத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக 13 தமிழர்கள் கைது


ஆந்திரா: சித்தூர் மாவட்டத்தில்  செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக 13 தமிழர்கள் கைது
x
தினத்தந்தி 2 May 2023 5:48 PM IST (Updated: 2 May 2023 6:01 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உட்பட 16 பேர் கைது செய்ய்யப்ட்டுள்ளனர்

திருப்பதி,

செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ,தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உட்பட 16 பேர் கைது செய்ய்யப்ட்டுள்ளனர் .40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள், நான்கு கார்களை ஆந்திர போலீஸ் பறிமுதல் செய்தனர்.


சித்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையின்போது 2 கார்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தப்பட்ட 8 செம்மர கட்டைகள் மற்றும் கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சித்தூர்- கடப்பா நெடுஞ்சாலையில் நடந்த வாகன சோதனையின்போது, 2 கார்களில் இருந்த 4 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. செம்மரக் கட்டைகள் கடத்தி வந்ததாக, வேலூர் மாவ்டடத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உட்பட 16 பேர் கைது செய்ய்யப்ட்டுள்ளனர்.


Next Story