ரெயில்வே வாரிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்பு
ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றுள்ளார்
புதுடெல்லி,
ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோட்டி பொறுப்பேற்றுள்ளார்.இந்த நியமனத்துக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன், லஹோடி ரெயில்வே வாரியத்தின் உறுப்பினராக (உள்கட்டமைப்பு) பணியாற்றினார்.
ரெயில்வேயில் தனது 36 ஆண்டுகளுக்கும் மேலான பணியில், மத்திய, வடக்கு, வட மத்திய, மேற்கு மற்றும் மேற்கு மத்திய ரெயில்வே மற்றும் ரெயில்வே வாரியத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.லஹோடி முன்பு மத்திய ரெயில்வேயின் பொது மேலாளராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story