மொத்த விலை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.7 சதவீதம் ஆக சரிவு!
மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் வருடாந்திர பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 10.7 சதவீதம் ஆக குறைந்துள்ளது.
புதுடெல்லி,
மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் வருடாந்திர பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 10.7 சதவீதம் ஆக குறைந்துள்ளது. இது வருடாந்திர பணவீக்க விகிதம், 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட அதிகம்.
கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது.
மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 12.41 சதவீதம் ஆக இருந்தது. உணவுப் பொருட்கள் மற்றும் உணவு தயாரிப்புகள் உள்ளிட்டவை அடங்கிய உணவு குறியீடு, செப்டம்பர் மாதத்தில் 175.2 ஆக சரிந்தது. இந்த இலக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 176.0 ஆக இருந்தது.
உணவு குறியீட்டின் அடிப்படையில் பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதம் 9.93 சதவீதத்திலிருந்து, 8.08 சதவீதம் ஆக செப்டம்பர் மாதம் குறைந்தது.