ஜார்கண்ட் மாநில அரசின் முடிவை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த மற்றொரு ஜெயின் துறவி மரணம்


ஜார்கண்ட் மாநில அரசின் முடிவை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த மற்றொரு ஜெயின் துறவி மரணம்
x

ஸ்ரீ சம்மத் ஷிகார்ஜி, ஜெயின் மதத்தினரின் புனிதப்பயண தலமாக உள்ளது.

ஜெய்ப்பூர்,

ஜார்கண்ட் மாநிலம் பரஸ்நாத் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சம்மத் ஷிகார்ஜி, ஜெயின் மதத்தினரின் புனிதப்பயண தலமாக உள்ளது. அதை சுற்றுலா தலமாக ஜார்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால், அந்த இடத்தின் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று ஜெயின் மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஜார்கண்ட் அரசின் முடிவை எதிர்த்து, ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சங்கிஜி கோவிலில் உண்ணாவிரதம் இருந்த ஜெயின் துறவி சுக்யேசாகர் மகராஜ் (வயது 72), கடந்த 3-ந்தேதி மரணம் அடைந்தார்.

இந்தநிலையில், அதே கோவிலில் 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மற்றொரு ஜெயின் துறவி சமர்த் சாகர் (74) நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.


Next Story